திவ்ய தேசங்கள்
திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.
திவ்ய தேச வகைப்பாடு
திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
சோழநாட்டு திருப்பதிகள் - 40
தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
நடுநாட்டு திருப்பதிகள் - 2
நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
வடநாட்டு திருப்பதிகள் - 11
108 வைணவத் திருத்தலங்களில்
84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும்,
11 திருத்தலங்கள் கேரளாவிலும்,
2 திருத்தலங்கள் ஆந்திராவிலும்,
4 திருத்தலங்கள் உத்தரப் பிரதேசத்திலும்,
3 திருத்தலங்கள் உத்தராகண்டத்திலும்,
1 திருத்தலம் குஜராத்திலும்,
1 திருத்தலம் நேபாளத்திலும்,
2 திருத்தலங்கள் வானுலகிலும் உள்ளது.
பெருமாள் பார்வை படும் திசைகள்
108 திவ்ய தேசங்களில் பெருமாள் அட்டவணையில் கண்டுள்ள திசைகளில் அருள்பாலிக்கிறார்.
கிழக்கு - 79 திவ்ய தேசங்கள்
மேற்கு - 19 திவ்ய தேசங்கள்
வடக்கு - 3 திவ்ய தேசங்கள்
தெற்கு - 7 திவ்ய தேசங்கள்
சோழ மண்டலம் - 40 திவ்ய தேசங்கள்
பாண்டிய மண்டலம் - 18 திவ்ய தேசங்கள்
மலை மண்டலம் - 13 திவ்ய தேசங்கள்
மத்திய மண்டலம் - 2 திவ்ய தேசங்கள்
தொண்டை மண்டலம் - 22 திவ்ய தேசங்கள்
வட மண்டலம் - 11 திவ்ய தேசங்கள்
வானுலகம் - 2 திவ்ய தேசங்கள்