வைணவத்தின் சமூக உள்ளடக்கம்
தமிழகத்தில் பன்னெடுங்காலமாகவே
வைணவம்
வழக்கில்
இருந்து
வருகின்றது.
ஆழ்வார்கள்
காலத்தில்தான்
அது
ஒரு பரந்துபட்ட சமையமாக விரிவடைந்தது
என்பது
நன்கறிந்தது.
ஆழ்வார்களுக்குப்
பின்னால்
ராமானுஜர்
வைணவத்தை
ஒரு
தத்துவார்த்த
அடிப்படையின்
மேல்
நிறுத்தியவர்.
அதனை
ஒரு
கட்டுக்கோப்புடைய
மதமாக
நிறுவிய
பெருமையும்
அவருக்கு
உண்டு.
சமய
மட்டத்திலும்
பல
சீர்திருத்தங்களைச்
செய்தவராவார்.
ராமானுஜருக்குப் பின்னால்
வைணவத்தில்
இரு
பிரிவுகள்
தோன்றின.
தோன்றிய
பகுதியைப்
பொறுத்து
அவை
வடகலை
என்றும்,
தென்கலை
என்றும்
பெயரிடப்பட்டு
அழைக்கப்பட்டன.
வடக்கில்
காஞ்சியை
மையமாகக்
கொண்டு
வடகலையும்
, தெற்கே
ஸ்ரீரங்கத்தை
மையமாகக்
கொண்டு
தென்கலையும்
வளர்ந்தன.
இவ்விரு பிரிவினருக்கும்
இடையே
தத்துவ
மட்டத்தில்
வேறுபாடு
இல்லை.
இவ்விருசாராருமே
ராமானுஜரையும்
அவரது
விசிஷ்டாத்வைத
தத்துவத்தையும்
முன்னோடியாகக்
கொள்கிறார்கள்,
என்றாலும்
இவர்களுக்கிடையே
இறையியல்,
ஜீவாத்மா
பரமாத்மாவை
அடையும்
வழி
போன்றவற்றில்
கடும்
வேறுபாடுகள்
உள்ளன.
ராமானுஜரின் காலம்
11--12 ம் நூற்றாண்டு ஆகும்,
அவர்
கி
பி
1137 ல்
காலமானார்.
அதற்குப்
பின்னால்
கிட்டத்தட்ட
130 ஆண்டுகள்
வைணவ
சமயத்தில்
நிகழ்ந்த
உள்
முரண்பாடுகள்
ஒரு
பெரும்
தத்துவார்த்த
சமயக்
கிளர்ச்சியைத்
தோற்றுவித்தன.
இதனால்
இப்பிரிவினரிடையே
பல்வேறு
நூல்கள்
தோன்றின.
சமயப்
ப்ரசாரங்களும்
நி்கழ்ந்தன.
இக்கால கட்டத்தில்
வைணவம்
மக்களிடையே
வெகு
வேகமாகப்
பரவியது.
ராமானுஜரின்
விசிஷ்டாத்வைத
தத்துவத்தை
இவ்வாறு
சுருக்கிச்
சொல்லலாம்.
புற உலகையும்
தனி
மனித
உயிர்களையும்
(ஜீவான்மாக்கள்)
ஒட்டுமொத்தமாக
உடல்
எனக்
கொண்டால்
இறைவனை
(பரமாத்மா)
அதில்
உறையும்
உயிர்
எனக்
கொள்ளலாம்.
எவ்வாறு
உடலுக்கு
உயிர்
ஆதாரமோ
அதுபோல
புறஉலகு,
ஜீவான்மாக்கள்
ஆகியவற்றால்
ஆன
உடலுக்குப்
பரமாத்மாவே
உயிராவான்.
எனினும் இறைவனே
உயிர்கள்
அனைத்துக்கும்
உலகுக்கும்
அந்தர்யாமியாய்
உள்நின்று
அவையனைத்தையும்
இயக்குகிறான்.எனவே
ஆன்மாக்கள்
பலவாயினும்
அவ்வான்மாக்கள்
அனைத்தையும்
தனக்கு
உடலாகக்
கொண்டு
ஆன்மாக்களுக்கெல்லாம்
ஆன்மாவாக
நிற்பது
பரமாத்மா
ஒன்றுதான்
என்பது
கருத்து.
அதே சமயம்
இறைவன்
உயிருக்கு
உயிராக
நிற்கும்
காரணத்தால்,
இறைவன்
வேறு,
ஜீவன்
வேறு
அல்ல,
இரண்டும்
ஒன்றுதான்
என்பது
பெறப்படுகிறது:.
ராமானுஜரைப்
பொருத்தமட்டில்
புற
உலகும்
உண்மை
(ஏனெனில்
அது
இறைவனின்
திருமேனி)
உயிர்களும்
உண்மை.
ஆனால் அவை
ப்ரம்மத்தின்
(இறைவனின்)
விசேஷணங்கள்.ப்ரம்மம்
அவ்விசேஷணங்களையுடைய
விசேஷியம்.
இந்த
விசேஷணம்,
விசேஷியம்
சேர்ந்த
கூட்டுக்கு
விசிஷ்டம்
என்று
பெயர்.அந்த
விசிஷ்டத்துக்கு
வேறாக
வேறொன்றும்
இல்லை.
அதனாலேயே
ராமானுஜருடைய
தத்துவம்
விசிஷ்டாத்வைதம்
என்றழைக்கபட்டது.
ராமானுஜர் தமது
விசிஷ்டாத்வைத
தத்துவத்தை
ஆழ்வார்களின்
பாசுசுரங்களின்
அடிப்படையிலேயே
உருவாக்கிக்கொண்டார்
என்பதற்கு
சான்றுகள்
உண்டு.
அதிலும்
குறிப்பாக,
நம்மாழ்வாரின்
திருவாய்மொழியே
விசிஷ்டாத்வைதத்தின்
அடிப்படை
என்பதிலும்
ஐயமில்லை.நம்மாழ்வாரின்
கீழ்க்கண்ட
திருவாய்மொழி
இக்கூற்றை
உறுதிப்படுத்தும்.
”திடவிசும் பெரிவளி நீர்நில
மிவை
மிசை
படர்பொருள் முழுவதுமாய்
அவையவை
தொறும்
உடல்மிசை யுயிரெனக்
காந்தெங்கும்
பரந்துனன்
சுடர்மிகு சுருதியுள்
இவையுண்ட
சுரனே
”
ராமானுஜர் இப்பாசுரங்களின்
அடிப்படையிலேயே
ப்ரஸ்தானத்
திரயங்கள்
என்றழைக்கப்படும்
உபநிடதங்கள்,
ப்ரம்மசூத்திரம்,
பகவத்கீதை
ஆகியவற்றுக்கு
உரை
எழுதித்
தமது
விசிஷ்டாத்வைதத்தை
விவரித்துக்
கூறினார்.
வடகலை, தென்கலைப்
பிரிவினர்
இருவரும்
ராமானுஜரின்
விசிஷ்டாத்வைதத்தையே
தங்கள்
தத்துவமாகக்
கொண்டுள்ளனர்.
அதாவது
தத்துவ
மட்டத்தில்
இரு
சாராருக்கும்
கருத்து
வேறுபாடோ
அன்றிச்
சச்சரவோ
இல்லை.
ஆனால்
பரமாத்மாவுக்கும்
ஜீவாத்மாவுக்கும்
உள்ள
உறவை
- வேறு
விதமாகச்
சொல்வதானால்,
தனிமனித
ஜீவன்
(உயிர்)
இறைவனை
அடையும்
வழிமுறை
என்ன
என்பதிலேயே
இவர்களது
வேறுபாடு
தொடங்குகிறது.
இவ் வேறுபாட்டை
விளக்க
வைணவ
அறிஞர்கள்
கூறும்
உவமை,
பரமாத்மாவுக்கும்
ஜீவாத்மாவுக்கும்
இடையே
உள்ள
உறவு
குரங்குக்கும்
அதன்
குட்டிக்கும்
இடையேயுள்ள
உறவைப்
போன்றது
என்று
வடகலையார்
கூறுகின்றனர்.
இதனை
மர்க்கட
நியாயம்
என்றழைக்கின்றனர்
(மர்க்கடம்
- குரங்கு).
தென்கலையாரோ அவ்வுறவு
பூனைக்கும்
அதன்
குட்டிக்கும்
போன்றது
என்று
கூறுகின்றனர்.
இதனை
“ மார்ஜாரம்--
பூனை
என்று
அழைக்கின்றனர்.
குரங்கு தன்
குட்டியை
வயிற்றில்
கட்டிக்
கொண்டு
கிளைக்குக்
கிளை
தாவிச்
செல்லும்.
அப்போது
குட்டி,
தாயின்
வயிற்றில்
ஒட்டிக்கொண்டு
அதை
இறுகக்
கட்டிக்கொள்ளும்.
இவ்வுவமையில்
தன்னைத்
தற்காத்துக்
கொள்ளும்
பொறுப்பும்
கவலையும்
குட்டிக்கு
உண்டு.
ஆனால்
பூனை
குட்டியைக்
கவ்விக்
கொண்டு
செல்லும்பொழுது
பூனைக்குட்டி
எவ்விதப்
பொறுப்பும்
கவலையும்
இன்றி
நிம்மதியாக
இருக்கும்.
இப்பிரிவினரின் வேறுபாட்டுக்கு
சமூகக்
காரணங்கள்
உண்டு.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
ஒன்று
என்பது
அத்வைதம்,
ஜீவாத்மா
வேறு
பரமாத்மா
வேறு
என்பது
துவைதம்,
வேறெனினும்,
பரமாத்மாவுக்குள்
ஜீவாத்மா
அடக்கம்
என்பது
விசிஷ்டாத்வைதம்.
இத்தகைய வேறுபாடுகள்
தோன்றியதற்கு
சமூகக்
காரணங்கள்
உண்டு.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி
ராமானுஜரின்
தத்துவம்
குறித்து
வடகலை,
தென்கலைப்
பிரிவினரிடையே
பெரும்
வேறுபாடு
ஏதுமில்லை.
இவ்விரு
பிரிவினரின்
வேறுபாடு
ஆன்ம
ரகஸ்யம்
பற்றியதே
ஆகும்.
இறைவனை
அடைவது
எவ்வாறு
என்பதிலேயே
தான்
முக்கிய
வேறுபாடு,
ஆன்மாவின்
தன்மை,
அது
பக்தி
மார்க்கமா
சரணாகதி
மார்க்கமா,
வருணாசிரம
ஆசார அனுஷ்டானங்களினாலா அல்லது உருவ
வழிபாடே
போதுமா
போன்றவற்றில்
வடகலை,
தென்கலை
வைணவப்
பிரிவுகளின்
சித்தாந்த
ரீதியான
வேறுபாடுகளையும்
அவற்றின்
குறிப்பாக
தென்கலை
வைணவத்தின்
சமூக
உள்ளடக்கம்
குறித்தும்
ஆராய்வோம்.
வடகலை வைணவத்தின்
ப்ரதான
ஆசிரியராகக்
கருதப்படுபவர்
வேதாந்த
தேசிகர்.
இவரது
காலத்துக்கு
முன்னரேயே
வடகலை
வைணவம்
தோன்றி
விட்டதெனினும்
அது
தெளிவாக
உருப்பெற்றது
வேதாந்த
தேசிகரின்
காலத்தில்தான்.
இவருடைய
நூல்கள்
பெரும்பாலும்
வடமொழியிலேயே
எழுதப்பட்டவை.
இந்நூல்களில்
பெரும்பகுதி
விசிஷ்டாத்வைத
தத்துவத்தை
நிலைநிறுத்துவதைக்
குறிக்கோளாகக்
கொண்டவை.
அவ்வகையில்
பிற
வேதாந்த
தத்துவங்களையும்,
வேத
விரோத
தத்துவங்களையும்
இவரது
நூல்கள்
விமரிசிக்கின்றன.
அதே
சமயம்
ஜீவாத்மா
பரமாத்மா
உறவையும்
இவை
ஆராய்கின்றன.
ஆழ்வார்களின் திவ்யப்
ப்ரபந்தங்களை
இவர்
எதிர்க்கவில்லையெனினும்
அவற்றைக்காட்டிலும்
ருமசாஸ்திரங்களையும்,
கீதை,
உபநிடதங்கள்,
பிரம்மசூத்திரம்
போன்றவற்றையே
தமது
கொள்கையின்
அடிப்படையாக
இவர்
கொள்கிறார்.
மோட்சம் அடைய
வேண்டுமெனில்
தரும
சாஸ்திரங்களில்
கூறப்பட்டுள்ள
வருணாசிரம
தரும
அடிப்படையில்
வாழவேண்டும்.
அதாவது
சாஸ்திரங்களில்
ஒவ்வொரு
வருணத்தாருக்கும்
விதிக்கப்பட்டுள்ள
ஒழுக்க
விதிகளைக்
கடைப்பிடிக்க
வேண்டும்.வேறு
வகையில்
சொல்வதானால்
தத்தம்
வினைப்பயனை
ஒட்டியே
விளைவுகள்
இருக்கும்.
விடுதலை
அல்லது
மோட்சத்திற்கு
தரும
சாஸ்திரங்களே
அடிப்படை
என்பது
தேசிகரின்
கருத்து.
தென்கலை வைணவத்தின்
தலைசிறந்த
ஆசிரியராகக்
கருதப்படுபவர்
மணவாள மாமுனிகள்.
வேதாந்த தேசிகரைக்
காட்டிலும்
காலத்தால்
நூறாண்டுகள்
பிந்திய
மணவாள
மாமுனிகள்
ஆவார்.
இவரது
காலம்
கி.
பி.
1370 - 1443 ஆகும்.இவருக்கு முன்னரே,
திருக்குருகைப்
பிரான்
தொடங்கி,
பெரியவாச்சான்
பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியர், அழகிய
மணவாளப்
பெருமாள்
நாயனார்
போன்றோர்
பல்வேறு
நூல்கள்
இயற்றித்
தென்கலை
வைணவத்தைப்
பரப்பினர்
என்றாலும்
மணவாள
மாமுனிகளே
தென்கலையின்
பிரதான
ஆசிரியராகக்
கருதப்படுகிறார்.
தனக்கு முன்பிருந்த
ஆசிரியர்களின்
நூல்களுக்கு
உரை
எழுதியதன்
மூலம்
தமது
கொள்கையை
அவர்
நிலை
நாட்டினார்.
உதாரணமாக,அழகிய
மணவாளப்
பெருமாள்
நாயனார்
இயற்றிய
ஆச்சாரிய
ஹ்ருதயம்,
திருவரங்கத்தமுதனார்
இயற்றிய
ராமானுஜ
நூற்றந்தாதி
பிள்ளை
லோகாச்சாரியர்
இயற்றிய
ஸ்ரீவசன
பூஷணம்,
முமுக்ஷுப்படி
ஆகிய
நூல்களுக்கு
மணவாள
மாமுனிகள்
எழுதிய
உரைகள்,
தென்கலை
வைணவத்தின்
கொள்கை
மற்றும்
நடைமுறை
ஆகியவற்றை
ஸ்திரமானதொரு
அஸ்திவாரத்தில்
நிறுத்தின
எனில்
மிகையாகாது.
பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும்
உள்ள
உறவை
ஒரு
ஆண்டான்
அடிமை
உறவுக்கு
மணவாள
மாமுனிகள்
ஒப்பிடுகிறார்,
பரமாத்மாவை
அடைய
விழையும்
ஜீவாத்மா
செய்ய
வேண்டியதெல்லாம்
இறைவனிடம்
தன்னை
ஒப்புக்கொடுத்து
விட்டு அவனை முழுக்கச் சரணடைய
வேண்டியதேயாகும்.
இன்னும் சொல்லப்போனால்
வருணாசிரமதருமமும்
அவற்றைக்
கூறும்
தரும
சாஸ்திரங்களும்
மோட்சத்திற்குத்
தடையாக
நிற்பவை
என
அவர்
கூறுகிறார்.
இவையெல்லாம்
உவமையில்
வரும்
குரங்குக்குட்டியின்
கவலையைப்
போன்றவை,
ஜீவாத்மா
பூனைக்
குட்டியைப்
போன்று
இறைவனிடம்
தன்னை
ஒப்படைத்துவிட்டுக்
கவலையின்றி
இருந்தாலே
போதுமானது.
ஆழ்வார்களின் பாசுரங்களும்
எளிமையான
வழிபாட்டு
முறையும்
இதிகாச
புராணங்களில்
கூறப்படும்
பக்தர்களின்
வாழ்க்கைக்
கதைகளும்
சரணாகதியும்
மோட்சத்திற்கு
அடிப்படை
என்று
மணவாள
மாமுனிகள்
கருதுகிறார்.
இறைவன்
சந்நிதியில்
வருண
வேறுபாடுகளுக்கு
இடமில்லை
என்பது
அவரது
கொள்கை.
பக்தி - ப்ரபத்தி
இறைவனை அடைய
பக்தியே
சிறந்த
மார்க்கம்
என்று
வடகலையாரும்
பிரபத்தியே
உற்றவழி
என்று
தென்கலையாரும்
கூறுகின்றனர்.
பக்தி
என்பது
கீதையில்
கூறப்பட்டுள்ள
பக்தி
யோகத்தையும்,
பிரபத்தி
என்பது
சரணாகதியையும்
குறிக்கும்.
இவ்விரு வழிகளும்
ஆரம்ப
காலத்திலேயே
- அதாவது
நடாத்தூர்
அம்மாள்
காலத்திலேயே
உருவாகிவிட்டன
எனினும்
பிற்காலத்தில்
மிகத்
தெளிவான
பிரிவுகளாக
அவைமாறி
விட்டன.
பக்தியோகம் என்றால்
என்னவென்று
கீதைக்குத்
தாம்
எழுதிய
கீதாபாஷ்யத்தில்
ராமானுஜர்
விளக்குகிறார்.
அதாவது
உபநிடதங்களிலும்
,பிற
நூல்களிலும்
குறிப்பிடப்பட்டுள்ள
இறைவனையும்
அவனது
கல்யாண
குணங்களையும்
சதா
இடைவிடாது
தியானித்தல்,
அவ்வாறு
தியானித்தலோடு
சாஸ்திரங்களில்
கூறப்பட்டுள்ள
தத்தம்
வருணாசிரம
வழிப்படி
வழிபடுதல்
அவ்வாறு
செய்யும்போது
பற்றற்றுச்
செய்தல்.
கீதையில் கூறப்பட்டுள்ள
ஞான
யோகமும்
கரும
யோகமும்
பக்தியோகத்திற்கு
துணை
செய்பவை
மட்டுமே.
இறைவனை
அடைய
ஞானயோகமும்,
கருமயோகமும்
நேரடி
உபாயங்கள்
அல்ல.பக்தியோகமே
நேரடி
வழியாகும்.
ராமானுஜர் தரும
சாஸ்திரங்களின்
வழியிலேயே
பக்தியோகத்தின்
மூலம்
இறைவனை
அடைய
இயலும்
என்று
கூறுகிறார்.
சித்தாந்த
ரீதியாக
வருணாசிரம
தரும
முறையை
எதிர்க்க
அவரால்
இயலவில்லை.
என்பதை
இங்கு
நாம்
மனங்கொள்ளுதல்
வேண்டும்.
ராமானுஜரின் இக்கருத்தை
வடகலையார்
மேலும்
விரித்துக்கொண்டனர்.
பக்தியோகத்தில் ஈடுபட
நித்திய
நைமித்திய
கருமங்களை
ஒருவர்
கடைப்பிடிக்க
வேண்டும்.
இந்நித்திய,
நைமித்திய
கருமங்கள்
(நித்தியம்
என்பது
தினமும்
செய்ய
வேண்டிய
அனுஷ்டானங்கள்,
நைமித்தியம்
என்பது
அவ்வக்காலத்தில்
செய்ய
வேண்டியவை)
வருணத்துக்கு
வருணம்
- ஏன்
சாதிக்குச்
சாதி
வேறுபடும்.
அவற்றை
இம்மியளவும்
பிசகாது
கடைப்பிடித்தால்
தான் மோட்சம் கிட்டும் என்று
வடகலையார்
கூறினர்.
இறக்கும்
தருணத்தில்
கூட
இறைவனை
ஸ்மரிப்பதும்
இதில்
அடங்கும்.
இதனை
அந்திம
ஸ்ம்ருதி
என்று
அழைக்கிறார்கள்.
இவற்றில்
சிறு
பிழை
நேர்ந்தாலும்
கூட
மோட்சம்
எய்துதல்
கிட்டாது
அல்லது
அது
அடுத்த
பிறவிக்குக்
காரணம்
ஆகும்
என்று
அவர்கள்
கூறினார்கள்.
தென்கலையார் ப்ரபத்தியே
சிறந்தது
எனக்
கூறுகிறார்கள்.
ப்ரபத்தி
என்பது
தாஸத்துவம்
அல்லது
சேஷத்துவம்
ஆகும்.
அவ்வழியே
எல்லாவற்றிற்கும்
- ஏன்
பக்தியோகத்துக்கும்
அடிப்படை
என
அவர்கள்
கூறுகிறார்கள்.
பக்தியோகத்தின்
முதல்
தேவை
வேதங்கள்,
சாஸ்திரங்கள்
ஆகியவற்றில்
பயிற்சி,வாழ்நாள்
முழுவதும்
இடைவிடாத
கட்டுப்பாடான
வழிபாடு,
தியானங்கள்,
அனுஷ்டானங்கள்
ஆகியவை
ஆகும்.
எனவே
இம்முறை
மேற்குலத்தில்
பிறந்த
ஆடவரால்
மட்டுமே
கைக்கொள்ளக்கூடியது.
ஏனெனில்
வேத
சாஸ்திரங்களைப்
பயிலுதல்
அதன்படி
ஒழுகுதல்
பெண்குலத்திற்கும்
சூத்திரருக்கும்
தடை
செய்யப்பட்டவை
ஆகும்.
ஆனால் ப்ரபத்தியோ
மிக
எளிமையானது.எளிய
வழிபாட்டு
முறையான
பஞ்சராத்ர
ஆகமம்,
இதிகாச
புராணங்களில்
வரும்
பக்தர்களின்
கதைகள்,
எல்லாவற்றிற்கும்
மேலாக
ஆழ்வார்களின்
பாசுரங்கள்
ஆகியவையே
ப்ரபத்திக்கு
அடிப்படை.
இவற்றை
சாதி,
வருணம்,
பிறப்பு,
கல்வி,
தகுதி
போன்ற
வேறுபாடு
இன்றி
யாரும்
பயிலலாம்.
அவற்றின்படி
எளிமையான
வழிபாட்டிலும்
ஈடுபடலாம்.
ப்ரபத்தியில்
ஈடுபட
ஒரே
தகுதி
இருந்தால்
போதுமானது.
அதாவது
கதியற்றவராகவும்
ஏதிலராகவும்
இருக்கவேண்டும்.
ப்ரபத்தி மார்க்கத்தை,
நிர்
அபேட்ச
உபாயம்,
அதாவது
வேறெதையும்
வேண்டாத
வழி
எனவும்
சித்த
“பாயம்“
- எண்ணியதும்
சித்தியாகும்
வழி
என்றும்
தென்கலையார்
கூறுகிறார்கள்.
வேதாந்த தேசிகர்
பக்தியோகம்,
ப்ரபத்தி
ஆகிய
இரண்டும்
உபாயங்கள்தான்
என்று
ஒப்புக்கொள்கிறார்.
ஆனால்
இவை
ஒன்றுக்கொன்று
மாற்றாக
அமைந்தவை
என்று
கருதுகிறார்.
பிறப்பு
ஞானம்,
தகுதி,
பொறுமை
உடையோர்
பக்தியோகத்தைப்
பின்பற்றவேண்டும்.
ஏழையரும்
ஏதிலரும்
மட்டுமே
- அதாவது
பக்தியோகத்தை
பயில
இயலாதோர்
மட்டுமே
- ப்ரபத்தியைக்
கைக்கொள்ளலாம்
என்று
கூறுகிறார்.
ஆனால்
தென்கலையாருக்குப் ப்ரபத்தியே உபாயம். மணவாள மாமுனிகள்
தரும சாஸ்திரங்களும், பக்தியோகமும் தாழ்ந்த வழி என்றும்
எக்கணத்தில் பூரண சரணாகதியே சிறந்தது
என்று உணரப்படுகிறதோ அக்கணத்தே பக்தியோகம் பொருளற்றதாகிப் போகிறது என்றும் கூறுகிறார்.
இன்னும் சொல்லப் போனால் பக்தியோகம்
இறைவனை அடையத் தடையாக உள்ளது
என்றும் அவர் கருதுகிறார்.
பகவத்
கீதையின் 18 ம் அத்தியாயத்தின் 66 ஆவது
சுலோகம் “சரமஸ்லோகம்“ என்று வைணவ சம்பிரதாயத்தில்
அழைக்கப்படுகிறது. ’சர்வதர்மான் பரியத்ஜ்ய. மாம் ஏகம் சரணம்
வ்ரஜ அஹம் த்வா சர்வ
பாபேப்யோ மோக்ஷ யிஸ்யாமிமா.சுச: ‘ என்பது கீதை.
இதன் பொருள் ‘எல்லாவிதமான தர்மங்களையும்
விட்டுவிட்டு என் ஒருவனையே சரணம்
அடை. நான் உன்னை எல்லாப்
பாபங்களிலிருந்தும் விடுதலை செய்து உனக்கு
மோட்சம் அளிக்கிறேன்.கவலையற்க’ என்பதாகும்.
இந்த
சுலோகத்தில் எல்லா தர்மங்களையும் எனக்
கண்ணன் கூறுவது ஸ்ருதி, ஸ்ம்ருதி
என்றழைக்கப்படும். எல்லாவித தர்மங்களையும், தர்மசூத்திரங்கள், சாத்திரங்கள் போன்ற எல்லா தருமங்களையும்
விட்டுவிட்டால்தான் இறைவனை அடைதல் சாத்தியம்’
என்று தென்கலையார் இதற்குப் பொருள் கொள்கிறார்கள்.
ஆனால்
வடகலையாரோ ‘விட்டுவிட்டு‘ என்பதை ஒரு அனுவாதமாகவே
கொள்கிறார்கள். அதாவது ‘விட்டுவிட்டு’ என்பது
நடந்து முடிந்த ஒரு விஷயம்.
எனவே இறைவனைச் சரணைடையும் முன்னர் தருமசாஸ்திரங்களைப் பற்றி
ஒழுகுதல் முதல் தேவை என்று
பொருள் கூறுகிறார்கள்.
இக்
கருத்துக்களிலும் இரு தரப்பினரின் அடைப்படை
வேறுபாடு வருணாசிரம தருமத்தைப் பற்றியதே.
ராமானுஜர்
மேலே குறிப்பிட்ட இரு விதமான விளக்கங்களையும்
தமது உரைகளில் கூறியிருக்கிறார்‘ - வேறுபாடான விளக்கங்கள் ‘சர்வதர்மான் பரித்யஜ்ய’ என்ற சுலோகத்துக்கு உண்டு,
அதாவது ‘எல்லா தருமங்களையும் விட்டுவிட்டு,
என்றும் ’ப்ரபத்தியைத் தவிர எல்லாத் தருமங்களையும்
விட்டுவிட்டு’ என்றும் இதற்குப் பொருள்
உண்டு.
ராமானுஜர்
கீதைக்கு எழுதிய பாஷ்யத்தில் முதல்
பொருளையும் ‘கத்யம் என்ற தனது
நூலில் இரண்டாவது பொருளையும் கொள்கிறார்’ என்று ஜெகதீசன் கூறுகிறார்.
எனவே ராமானுஜரின் கொள்கை இச்சரம ஸ்லோகத்தைப்
பொறுத்த மட்டில் தென்கலையாருக்குச் சாதகமாகவே
இருக்கிறது எனக் கொள்ளலாம்.
வழிபாட்டு
முறைகளிலும் இரு சாராரும் வேறுபடுகின்றனர்.
வடகலையார் வைகானச ஆகம முறையையும்,
தென்கலையார் அதைக்காட்டிலும் எளிமையான வழிபாட்டு முறையாகிய பஞ்சராத்ர ஆகம முறையையும் கைக்கொண்டனர்.
ராமானுஜர் பழைய வைகானச முறையை
மாற்றி பஞ்சராத்ர முறையைக் கோவில்களில் குறிப்பாக ஸ்ரீ ரங்கம் கோவிலில்
நடை முறைப்படுத்தினார்.
வைகானச
முறை வடமொழி சாஸ்திர விதிகளை
அடிப்படையாகக் கொண்டது. எனவே வடகலையாரால் பெரிதும்
போற்றப்பட்டது.
தென்கலையாரோ
பஞ்சராத்ர வழிமுறையை மேலும் எளிமையாக்கினர். அதன்
விளைவே உருவ வழிபாட்டுக்கு அவர்கள்
தரும் முக்கியத்துவம் ஆகும். இதனை ’அர்ச்சாவதாரம்’
என்று அவர்கள் அழைத்தனர்.
இன்னும்
சொல்லப் போனால் ‘அர்ச்சாவதாரத்தைக் காட்டிலும்
சிறந்தது வேறெதுவுமில்லை என்று அவர்கள் போற்றினர்.
இதனை ‘அத்தாணிச்சேவை’என அவர்கள் கூறினர்.
இதன் பொருள் ‘அந்தரங்கக் கைங்கரியம்’
என்பதாகும். அதாவது சாஸ்திர விதிப்படி
செய்யபடும் கருமங்களைக் காட்டிலும் இந்த அர்ச்சாவதாரமே சிறந்ததாகும்.
எவ்வாறு
உறங்குபவனின் கைப்பண்டம் அவனையறியாது கைநழுவிப் போகுமோ அவ்வாறே அத்தாணி
சேவகத்தில் ஈடுபடுவோருக்குக் கருமம் விலக்கானது என்று
தென்கலையார் கூறினர்.
இதன்
தொடர்பாக ‘மங்களாசாசனம்’ என்பது கைங்கர்யங்களில் எல்லாம்
சிறந்தது எனத் தென்கலையார் கூறினர்.
இது
இறைவன் பால் கொண்ட காதலால்
அவனது உருவத்திற்கு,விக்ரகத்திற்குத் தீங்கு விளையாது,அதனைக்
காப்பது,தொண்டு செய்வது ஆகியவற்றைக்
குறிக்கும்.இதனை செய்ய ஜாதி
வருண வேறுபாடுகள் இல்லை.
இவ்விரு
கலையாருக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பதினெட்டு என்று கூறப்படுகிறது. அடிப்படையான
கொள்கை ரீதியான வேறுபாடுகளில் முக்கியமானவற்றில்
சில.
சமூதாயத்தை
நான்கு வருணங்களாகப் பிரித்து உற்பத்தியில் நான்கு விதமாக அவைகளை
ஈடுபடச் செய்து அந்நான்கு வருணத்தாருக்கும்
அதன் அடிப்படையில் வேறுபாடுகள் கற்பித்து, நான்கு வருணத்தாருக்கும் வேறுபட்ட
ஒழுக்கங்களையும் நீதிகளையும் வகுத்ததில் இத்தரும சாஸ்திரங்கள் பெரும்பங்கு
வகிக்கின்றன..
பகவத்
கீதையிலிருந்து அவரவர் குணத்திற்கும் செய்கின்ற
தொழிலுக்கும் ஏற்ப’ என்று கீதை
அத்தியாயம் 4 13 ல் கண்ணன் கூறினான்.
இதன் மூலம் வருணப் பிரிவினைக்கு
தெய்வீக அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இறைவனே இதற்குப் பொறுப்பு
என்று கூறிவிட்டதால் மானிடர்களுக்கு இதில் மறுப்புக் கூற
ஏதுமில்லை என்று ஆகிவிட்டது.
இவ்வாறு
உருவாக்கப்பட்ட நான்கு வருணத்தாருக்கும் உற்ற
தொழிலை இறைவனே கீதையில் இவ்வாறு
கூறுகிறான்’ பிராமணர் க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர்
ஆகியோரின் தொழில்களை நான் கூறுகிறேன்’
‘மனத்தையும் இந்திரியங்களையும்
அடக்குதல் பொறையுடமை, நிர்மலம், ஞானம், விஞ்ஞானம் ஆகியவற்றைப்
பயிலுதல், இறைப்பற்று, பயிலுதல் பயிற்றுவித்தல் பிராமணரின் தொழில்’.
‘வீரம், அச்சமின்மை,
திடம், போர்க்கள்த்தே தீரம், தானம், காத்தலாகியவை
க்ஷத்திரியனின் இயல்பான தொழில்’.
விவசாயம்,
ஆநிரை காத்தல், வாணிகம், வைசியர் கடன்; மேல்
வருணத்தாருக்கு தொண்டு செய்வதே சூத்திரர்
தொழில்.
தரும
சூத்திரங்களும், தரும சாஸ்திரங்களும் கீதையில்
கூறப்பட்ட இக்கருத்தையே மிக விரிவாகக் கூறியுள்ளன.
சூத்திர
வருணத்தின் உட்பிரிவாக எண்ணிறந்த சாதிகள் உருவாக்கப்பட்டன, ஒவ்வொரு
சாதியும் உற்பத்தியில் ஏதாவது ஒரு வழியில்
ஈடுபடுத்தப்பட்டன, விவசாயிகள், தச்சர், கொல்லர், கருமான்,
தட்டர் போன்ற நேரடி உழைப்பாளர்கள்
சூத்திர வருனத்தில் அடக்கப்பட்டனர்.
இது
மட்டுமின்றி மிகத் தாழ்ந்த சாதியினராகக்
கருதப்பட்ட பின்னாளில் பஞ்சமர் அல்லது ஐந்தாவது
வருணத்தார் எனப்படுவோரும் சூத்திர ஜாதியினர் ஆயினர்.
ராமானுஜர்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக அந்தஸ்து வழங்க
வேண்டி அவர்களை வைணவத்தோடு இணைத்தார்.
இறைவனின் தொண்டர்களாயின் அவர்கள் உயர்ந்த குடியினரே
என்ற ஆழ்வார்களின் கொள்கைகளை அவர் நடைமுறைப் படுத்தினார்.
தென்கலை
வைணவத்தார் ராமானுஜரின் சாதீய ஏற்றத் தாழ்வு
எதிர்ப்புக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் சென்று
அதற்குச் சித்தாந்த ரீதியான ஒரு அந்தஸ்தை
ஏற்படுத்தினார் என்று கூறலாம், கடையனுக்கும்
கடைத்தேற்றம்’ என்ற கொள்கையைச் சிக்கெனப்
பற்றிக்கொண்டு அக்கொள்கைக்கு சமய அந்தஸ்தையும் ஏற்படுத்தித்
தந்தனர் என்றால் அது மிகையாகாது.
தென்கலை
வைணவத்தார் ஆழ்வார்களால் இயற்றப்பெற்ற நாலாயிர திவ்யப் ப்ரபந்தங்களை
வேதங்களுக்கு இணையானவை என்று கொண்டனர்.
இதற்குக்
காரணம் அவர்கள் வடமொழி அறியாதவர்கள்
என்பதல்ல. தமிழகத்தில் சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசும்போது அவர்களுடைய மொழியிலேயே பேசவேண்டியதாயிற்று என்பதே அதன் பொருள்.
மணவாள
மாமுனிகள் ‘ஆசார்ய ஹிருதயம்’ என்ற
நூலுக்கு எழுதிய உரையில் இது
குறித்துப் பின் வருமாறு பேசுகிறார்.
‘செந்திறந்த தமிழோசை
வட சொல்லாகி என்று ஸம்ஸ்கிருதத்தோடு ஸஹபடித
மாகையாலே, அகஸ்தியரால் வெளியிடப்பட்ட திராவிடமும் அநாதியயுள்ளது’ (ஆசாரிய ஹிருதயம்-14)
அதனை
(வடமொழி வேதங்களை) “வசையில் நான் மறை
என்று சொன்னது போல இதனையும்
‘ஏதமிலாயிரம்’ என்று நிர்தோஷமாகச் சொல்லிற்று.
அதனை சுர்டர்மிகு சுருதி ‘ என்றது போல இதனையும்
செவிக்கினிய செஞ்சொல் என்றது ‘வேத நூல்
ஓதுகின்ற துண்மையல்ல தில்லை என்று அதனை
சத்யவாதி என்றது போல இதனை
பொய்யில் பாடலாயிரம் என்று சொல்லிற்று. ‘பண்டை
நான்மறை’ ’ நிற்கும் நான்மறை ‘ என்று அதனை அநாதியாகவும்
மேல் அழிவில்லாததாகவும் சொன்னது போல இதனையும்
முந்தையாயிரம், அழிவில்லாவாயிரம்’ என்றது.
“இயற்பாவான திருவிருத்தம்
திருவாசிரியம் பெரிய திருவந்நாதியாகிற மூன்று
பிரபந்தங்களும் ருக்கு, யஜுர், அதர்வணம்
என்கிற மூன்று வேதங்களைப் போன்றது,
திருவாய்மொழியானது இசைகொளவேதம் என்ற சாமவேதத்திற்குச் சமமானது
(ஆ-ஹி 50)
இவற்றிலிருந்து
தென்கலை வைணவர்கள் தமிழை வடமொழிக்கு இணையாகவும்,
நம்மாழ்வாரின் பாசுரங்களையும் அதனோடு பிற பிரபந்தங்களையும்
வேதங்களுக்கு இணையாகவும் கொண்டார்கள் என்பது புலனாகிறது.
சாஸ்திரங்களைக்
கற்றவர்களை சாஸ்திரிகள் என்றும் சாமானிய மக்களை
சாரக்ஞர் என்றும் மணவாள மாமுனிகள்
கூறினார்.
தருமசாஸ்திரங்களைக்
கற்றுத் தேர்ச்சியுற்று அதன் வழியால் இறைவனை
அடைய எண்ணுகிர சாஸ்திரிகளைக் காட்டிலும் சாமானிய மக்கள் சிறந்தவர்கள்
என்று காட்ட அவர் கீழ்வருமாறு
எழுதினார்.
சாஸ்திரங்களிலே
ஊற்றமுடையவர்கள் தெப்பம் பற்றி ஆறு
நீஞ்சுமலர்கள் தெப்பத்தை ஒருகையிலேயிடுக்கி தாங்களும் ஒருகை துழாவுமா போல்
ஸ்வப்ரயத்நமென்ன அதனாலாகும் பகவத்க்ருபையென்ன ஆக இரண்டையும் அவலம்பித்துக்
கொண்டு பிறவிக்கடல் நீந்துவார்க்கே என்கிறபடியே ஸம்சார சமுத்திரத்தைக் கடக்க
நினைக்க சாஸ்திரதாத்பரிய சார்மான திருமந்திரத்தை உணர்ந்த
சாரக்ஞர்கள், ஓடம் ஏறினவர்கள் போல
இரண்டு கைகளையும் விட்டு பகவத் ப்ராப்தியாகிற
கரையைக் கிட்டுகைக்கு ஈடான காலத்தைச் சிந்தனை
பண்ணியிருப்பார்கள்,’ ( ஆ-ஹி 18)
இதனைச்
சுருக்கிச் சொல்வதானால் சாஸ்திரம் பயின்றோர் தெப்பக் கட்டயை ஒரும்
கையால் துழாவிக் கொண்டிருப்பவர்கள், சாமானியர்கள் திருமந்திரத்தைச் சொல்லிக்கொண்டு, படகிலேறிக் கரையைச் சேருவதற்கு எக்கவலையு
இன்றிக் காத்திருப்பவர்கள்.இவ்வுவமை நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட
மர்க்கட,மார்ஜார உவமையோடு ஒப்பிட்டுப்
பார்க்கக் கூடியதாகும். தெப்பக் கட்டையைப் பற்றுவோர்
வடகலையார், ஓடத்தில் ஏறியவர்கள் தென்கலையாவர்.
அத்தோடு
மட்டுமல்ல,வருணாசிரம தருமங்கள் தாழ்ந்த படியைச் சேர்ந்தது
என்றும் சரணாகதியே சிறந்தது என்றும் கீழ்வருமாறு மணவாள
மாமுனிகள் விளக்குகிறார்.
‘வாத்சல்யமுடையவளான பெற்ற
தாயானவள் மண்ணைத் தின்ன ஆசைப்பட்ட
தன் குழந்தை முகம் கன்றாதபடிக்கு
முந்தற மண்னைத் தின்னும்படியாக இசைந்திருந்து
பின்னை அதற்கு மாற்று மருந்து
இடுமாப் போல சகல ஆத்மாக்களிடத்திலும்
தாய்போலே வத்ஸலனான ஸர்வேஸ்வரனும் சேதனருடைய ருசிக்குத் தகுதியாக பந்தகங்களான சாஸ்திரங்களையும் காட்டிப் பின்னையந்த நிவர்த்த பேஷஜமான சாஸ்திரங்களையும் காட்டுவான்.,’
இக்கூற்றில்
தரும சாஸ்திரப் பயிற்சியை சிறு குழந்தை அறியாமையால்
‘மண் தின்ன்னுவதற்கு ‘ஒப்பிடுகிறார் அந்த மண் தின்னும்
தவறை நீக்கும் வழியாக -நிவர்த்தகமாக சரணாகதியைக்
காட்டுகிறார்.
எல்லாவற்றிக்கும்
மேலாக சாதி வேறுபாடு காண்பது
பாவத்தில் எல்லாம் பெரும் பாவம்
என்று மணவாள மாமுனிகள் உரைக்கிறார்.
’நீரார் முகில்
வண்ணன் பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரே’ என்ற நம்மாழ்வார்
அருளிச் செய்தபடியே ஏதானும் ஜன்ம வ்ருத்தங்களை
உடையரேயாகிலும் நித்யஸூரிகளோ டொப்பர்கள் என்னும்படி ச்லாக்கியராய் இலங்குவான் என்கிறபடியே உயர்கதியடையா நிற்க-
அமர
ஓரங்கமாறும் வேதமோர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்
நுமரைப் பழிப்பாராகில் நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர்போலும்....உத்திருஷ்ட
யோனியிற் பிறந்தவர்களாகிலும் கர்ம சண்டாளராய் இனியொருகாலும்
கரையேற யோக்யதையில்லை எனும்படி அதோகதி அடைவார்கள்.’
வருணாசிரம
தருமப்படியான அனுஷ்டானத்தைக் கருமமென்றும், இறைவனது நேரடித் தொண்டை
கைங்கர்யம் என்றும் தென்கலையார் அழைக்கின்றனர்.
மணவாள மாமுனிகள் இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பின்வருமாறு கூறுகிறார்.
‘க்ரியா சப்தத்திலே
சொல்லப்பட்ட கர்மமானது அஸத்தியமும் அநித்யமுமான ஜாதிக்கு ஏற்றிருக்கும், வ்ருத்தி சப்தத்தால் சொல்லப்ப்ட்ட கைங்கரியமானது ஸத்யமும் நித்யமுமான தாஸத்துவத்திற்கு ஏற்றிருக்கும்.’
வருணத்தை
அஸத்தியமென்றும் அநித்தியமென்றும் பேசுவது ஏனெனில் அது
ஆத்மாவுக்கு ஏற்பட்ட வடிவன்றே. வந்தேறியான
தேஹத்தளவே நின்று அந்த தேஹத்தளவோடு
கூடவே கழிந்து போவதன்றோ வருணமென்பது.
ஆகவே அதனை அஸருத்தியமென்றும் அநித்தியமென்றும்
சொல்லக் குறையில்லை. அடிமை என்பது அப்படிப்பட்டதன்று.
திருமாலே நானுனக்கு பழவடியேன்’ என்று அது ஆத்மாவுக்கே
ஏற்பட்ட வடிவாகி ஆத்மாவுள்ளவனாகவும் தொடருகையாலே
அது ஸத்யமும் நித்யமுமாகப் பேசப்பட்டது (ஆ-ஹி -26)
ராமானுஜர்
தோன்றிய காலம் தமிழகத்தில் நிலவுடமை
வேரூன்றிவிட்ட காலமாகும். நிலமே பிரதான உற்பத்திச்
சாதனமாக மாறிவிட்ட காலம். இதன் அடிப்படையில்
பல்வேறு தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் உழவுத்
தொழிலிலும் அதனோடு தொடர்புடைய பல்வேறு
தொழில்களிலும் ஈடுபட்டனர்.
“சுழன்றும் ஏர்ப்பின்னது
உலகம்’ என்று கூறப்பட்டதன் பொருளும்
இதுவே. நிலங்கள் அளக்கப்பட்டு அவைகள் பிராமணர்களுக்கு ப்ரமதேயமாக
வழங்கப்பட்டன. கிராமங்கள் தோறும் கோவில்கள் எழுப்பப்பட்டு
அவைகளுக்கு தேவதான நிலங்கள் வழங்கப்பட்டு
அவை சமய மையங்களாக மட்டுமின்றிப்
பொருளாதார மையங்களாகவும் செயல்பட்டன.
இச்சமூக
அமைப்பில் வேதம், தருமசாஸ்திரம் போன்றவற்றைப்
பயில்வோராகிய பிராமணர்களும் அவர்களைப் போற்றிப் பாதுகாத்த அரசர்களும் மேல்தட்டு வர்க்கத்தினராகவும், உழவுத் தொழிலிலும் அதனோடு
தொடர்புடைய தொழில்களிலும் ஈடுபட்டோர் கீழ்சாதியினராகவும் கருதப்பட்டனர்.
இது
வர்க்க முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. ஏழையரும் ஏதிலருமாக வாழ்ந்து கடையர்களாகத் தாழ்ந்த அடித்தட்டு மக்களுக்கு
உழைப்பைத் தவிர வாழ்க்கையென வேறொன்றும்
இல்லை என்ற நிலை உருவாயிற்று.
’ஸ்ரீரங்கம் ஆச்சாரியர்கள்
தமிழைப் பெரிதும் பயன்படுத்தியதற்கும் காஞ்சி ஆச்சாரியர்கள் வடமொழியைப் பயன்படுத்தியதற்கும் அவர்கள்
தேர்ந்தெடுத்த மூலநூல்கள் மட்டும் காரணமல்ல, ஆழ்வார்களின்
பாசுரங்களைத் தமது ப்ரசங்கங்களிலும் எழுத்துக்களிலும்
ஸ்ரீரங்கம் ஆச்சாரியர்கள் ப்ரபலப் படுத்திக்கொண்டிருந்த போது ராமானுஜரின்
விசிஷ்டாத்வைத தத்துவத்தைக் கட்டிக்காப்பதில் காஞ்சி ஆசாரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வேறுபாட்டையும் எவ்வாறு இப்பிரிவுகள் தம்மை
மேலும் மேலும் வளர்த்துக்கொண்டன என்பதையும்
விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால்
12, 13 ஆவது நூற்றாண்டுகளில் காஞ்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் நிலவிய சமூக,வரலாறு
மற்றும் சமயச் சூழ்நிலைகளை நாம்
ஆராயவேண்டும்.
இன்று
போலவே அன்றும் ரங்கநாதர் ஆலயமே
ஸ்ரீரங்கத்தின் மையமாக இருந்தது .மத்திய
காலத்தில். அவ்வாலயம் (Burton Stein கூறுவது போல) பலமிக்க
நிலவுரிமையாளர்களான பிராமணர் அல்லாத பக்தர்களின் வசம்
இருந்தது. ஆழ்வார் பாசுரங்களைப் பாடுதல்
எளிமையான பஞ்சராத்ர வழிபாடு, கோவில் வழிபாட்டில் சூத்திரர்களுக்குப்
பங்கு ஆகியவற்ரை ரங்கநாதர் ஆலயத்தில் நிறுவியதன் மூலம் நாதமுனி, யமுனர்,
ராமானுஜர் ஆகியோர் ஸ்ரீ வைஷ்ணவ
பிராமணர்களுக்குத் தலைமைப் பொறுப்பையும் செல்வாக்கையும்
உண்டாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.
நாதமுனியின்
சீடர்கள் அவர் சேகரித்து வைத்திருந்த
நாலாயிர திவயப் ப்ரபந்தங்களுக்கு மெட்டமைத்துப்
பாடியதன் மூலம் அவற்றிற்கு ஒரு
செல்வாக்கை ஏற்படுத்தினார்கள். ஸ்ரீரங்கம் ஆலயத்தில்தான் முதன் முதலாக தினசரி
வழிபாட்டில் ஆழ்வார்களின் பாசுரங்கள் சேர்க்கப்பட்டன. யமுனரும், ராமானுஜரும் இந்த ஆலயத்தில் தினமும்
நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் குறித்து
பக்த கோடிகளிடையே ப்ரசங்கம் செய்தனராம்.
இன்றைக்கும்
இந்த மரபு தொடர்கிறது. இப்ப்ரசங்கங்கள்
வடமொழி சாஸ்திரங்களைக் கற்கும் தகுதியற்ற பெண்டிர்,குழந்தைகள், சூத்திரர் ஆகியோரைக் கவர்ந்து இழுத்தது.
காஞ்சீபுரம்,
ஸ்ரீரங்கத்தைக் காட்டிலும் கலப்புக் கலாசாரம் உடையதாக மத்திய காலத்தில்
இருந்தது, அது வாணிகம், கலாச்சாரம்
ஆகியவற்றின் முக்கிய மையமாக இருந்ததோடு
வடமொழியில் இருந்த எல்லாவிதமான தத்துவ
தரிசனங்களைப் பயிலும் மையமாகவும் இருந்தது.
காஞ்சியைச் சுற்றி முக்கியமான புத்த
விஹாரங்களும்,சமணப்பள்ளிகளும் சைவ, சமணக் கோவில்களும்
வேதாதம் மீமாம்சை மற்றும் நியாயம் ஆகியவற்றைப்
பயிற்றுவிக்கும் மடங்களும் இருந்தன.பெரும் எண்ணிக்கையிலான
ஸ்மார்த்த பிராமணர்கள் அங்கே குடியிருந்தனர்.
மத்திய காலம் முழுவதும் காஞ்சியிலுள்ள
கோவில்களும் சநாதன பிராமணக் குழுக்களும்
அரசர்களிடமிருந்து கணிசமான உதவிகளையும் அரவணைப்பையும்
பெற்று வந்தனர்.
தென்கலை
வைணவம் தாமிரவருணி நதிக்கரையில் பிறந்து காவிரிக் கரையில்
திருவரங்கக் கோயிலில் வளர்ந்தது.ரங்கநாதர் ஆலயம்மட்டுமன்றித் தென் தமிழகத்தில் உள்ள
பெரும்பாலான கோயில்களிலும் அது வளர்ந்தது. அக்கோயில்கள்
மன்னர்களின் அரவணைப்பில் வளரவில்லை. எனவேதான் வருணாசிரம தரும முறையையும் வடமொழி
தரும சாஸ்திரங்களையும் அக் கோயில்கள் கட்டிக்
காக்க முயலவில்லை எனக் கொள்வதில் தவறேதுமில்லை.
தெளிவாகச் சொல்லவேண்டுமானால் தரும சாஸ்திரப் பயிற்சி
பற்றிய ஒரு கல்வெட்டு கூட
ஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை
என்பதே இதை உறுதிப்படுத்தும்..
தென்கலை
வைணவம் தாழ்த்தப்பட்ட மக்களுடைய நிலையிலிருந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதும்.
கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற கொள்கையைப் ப்ரகடனப்
படுத்தியதும்,எளிமையான வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்ததும் ஆகிய காரனங்களால் வைணவத்தை
ஒரு வெகுஜன மதமாக மாற்ற
உதவியது.
தென்கலை,
வைணவப் ப்ரசாரம் வேறொரு நிலைக்கும் இட்டுச்சென்றது.பேச்சளவில் சாதிவேறுபாட்டை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் செயலிலும் அது சாதி வேறுபாட்டைக்
களைய தன் வழியில் முயன்றது.தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கருதப்பட்ட ஹரிஜனங்கள், ’நாடார்கள் போன்றோரை மேல் சாதியினராகவும் பிராமணராகவும்
அது உயர்த்தியது.
மணவாள
மாமுனிகள் காலத்தில் இத்தகைய சமூகப் பெயர்வுகள்
பெருமளவில் நிகழ்ந்தன.
Thanks to