Header Ads

Header ADS

திருமழிசை ஆழ்வார்

திருமழிசையாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார். இவர் சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்ற ஊரில் அவதரித்தவர்.

மாதம் – தை
நட்சத்திரம் – மகம்
திவ்விய ப்ரபந்தம் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்.

திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.

தைம் மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்.

பிற பெயர்கள்

1. பக்திசாரர்

2. உறையில் இடாதவர் - வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட   (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது) குடமூக்கிற் பகவர் - என யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பது இவரையே என்றும் சொல்லப்படுகிறது.

3. திருமழிசையார்

4. திருமழிசைபிரான்

பிறப்பின் அற்புதம்

பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் பிறந்த திருமழிசை என்ற திருநாமம் கொண்ட ஆண் மகவு, பின்னாளில் பெருமாள் மேல் கொண்ட ஆறாத பக்தியால் பல பாசுரங்களை இயற்றித் திளைத்தது. சக்கரத்தாழ்வாரே இத்திருக்குழந்தையாகப் பிறந்து திருமழிசை ஆழ்வார் என பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது வரலாற்றில் காணப்படும் அற்புதங்கள்:

பிரப்பங்காட்டில் இருந்த இக்குழந்தையை, பிரம்பு வெட்டிச் செல்ல வந்த திருவாளன் என்பவர் கண்டார். கண்ணுக்கு இனிய அக்குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். இக்குழந்தையோ பால் அருந்தவில்லை. பசியென்று அழவும் இல்லை.

ஆனாலும் பிறந்த பச்சிளங்குழந்தை உண்ணா நோன்பு இருந்ததால் பார்ப் போருக்கு மனம் பதைத்தது. அதில் ஒருவர் தன் மனைவி யிடம் பசும்பாலைக் காய்ச்சி இனிப்புச் சுவையேற்றிக் கொடுக்கச் சொல்ல, குழந்தையும் பால் அருந்தத் தொடங்கியது. காலம் பல சென்ற பின்னர் ஓர் நாள் சிறுவனான அக்குழந்தை சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அத்தம்பதி யினரைப் பருகக் கூற, அருந்தியவுடன் அவர்கள் முதுமை நீங்கியது. இளமை பெற்ற அவர்களுக்கு இப்பாலின் மகிமையால் குழந்தையொன்று பிறக்க அக்குழந்தைக்கு களிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

சீரும், சிறப்புமாய் வளர்ந்த களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். ஆரம்ப காலங்களில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார் திருமழிசை. இவரை முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், வைணவ சமயத்தை ஏற்கச் செய்து, திருமந்திர உபதேசம் செய்தார்.

திருமழிசையாழ்வாரும் சொன்னவண்ணம் செய்த பெருமாளும்

தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்காவில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார். அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகப்பலதாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார். கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட இயலாமையை நீக்குமாறு கேட்க, ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார்.

பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான். அவள் ஆழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல, ‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன், கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, யதொக்தகாரி பெருமானிடம்-

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்
என்று பாடினார்.

(கணிகண்ணைன் செல்கின்றான், நானும் செல்கிறேன், கச்சியில் இருக்கும் பெருமானே, நீயும் இங்கு இருக்காவேண்டாம். நீ அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் சுருட்டிக்கொண்டு எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.)

பெருமானும் அவ்வாறு சென்றார். அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு, அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன், தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார். திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

(கணிகண்ணைன் திரும்புகிறான், நானும் திரும்புகிறான், கச்சியிப் பெருமானே, நீயும் அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் விரித்து படுத்துக்கொள்ள எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.)

என்று வேண்ட திருமாலும் திரும்பினார். ஆழ்வார் சொன்னபடி செய்தமையால், பெருமானுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர் பெற்றார்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் பதிமூன்று திவ்விய தேசத் திருக்கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.